Buying OR Selling Cars?

Buying OR Selling Cars?

வியாழன், 19 டிசம்பர், 2013

"விடிய வேண்டும் சட்டமும் உரிமைகளின் விட்டமும்; உணர்வுகளின் மட்டமும் உயர்ந்திட, என் நாட்டில், பாரபட்சம் கலைந்திட வேண்டும்;மதங்களும் மனங்களும் மதிக்கப் பெற வேண்டும்"





"விடிய வேண்டும் சட்டமும் உரிமைகளின் விட்டமும்; உணர்வுகளின் மட்டமும் உயர்ந்திட, என் நாட்டில், பாரபட்சம் கலைந்திட வேண்டும்;மதங்களும் மனங்களும் மதிக்கப் பெற வேண்டும்" 




நேரம் விடிந்தாலும்    ,                                                

நிமிட முள் அசைந்தாலும்,
வானம் வெளுக்கவில்லை...
வெள்ளியும் வானில் இல்லை,
சேவலின் ரீங்காரம்
இன்னுமே கேட்கவில்லை...
செம் மேக தோரணம்
செதுக்கவும் சிட்பி இல்லை
ஒலி முதலை ஏட்ரி வைக்க 
ஒரு விளக்கு எனக்கு இல்லை 
ஒரு கையில் எரி தழல் 
மரு கையில் சுடு புனல் 
தோரணம் கட்ட வானில் நான் 

காரணம் என்ன கோணல் தான் 
வாரணம் சூழ்ந்த வயல் காட்டில் 
வாட்குருவி எங்கு மொய்க்க ? 
கார் நிறத்து வானத்தில் 
யார் ஏற்பார் என் வர்ணம் ?
தூரிகை சுடும் நான் வரைந்தால் சூரியனை...
தாரகை விழும் நான் ஒட்ட பசை விஷமோ ?
காரிகை இனி ஒழிய ஒன்றும் 





காரணம் இல்லை 
காரிருல் காட்டில் 
நாரிகளின் முகம் இனிமேல் 
பூரணையின் புகழ் பெறாது
சூரியனின் சாளரம் 
சூனியம் தான் இனிமேல் 
யாரும் இல்லை 
யாகம் நிறுத்த 
கதிர் அவனுக்கு
மனு அனுப்ப :
கதிர் பூக்க, 
நிரம் பிறக்க,
பூ மலர,
காய் கனிய,
தரு உயர , 
நீ வேண்டும் என்று 
நீரில் எழுதி 
காற்றில் இட்ட கை எழுத்து
கரைந்து கசிந்தது
இரவில் உருகிய மெலுகின் அழுகையில்,
இனி பகல் பூலோகத்தில் ?
இந்த மெலுகுக்கு விதி இதுவோ? 
வெந்த மேனி உருகி வடிய 
நொந்த ஆவி கருகி நிமிர 
இந்த மெலுகுக்கு வாழ்வு வேண்டும் ! 
மனு ஏட்பாய் கதிரா!
தவம் கலைவாய்
சுயம் மரப்பாய்!
மின்மினியும் களைத்துவிட்டது ,
வென் நிலவும் அரை தூக்கம் , 
விளக்கணைக்க வேண்டும் நாங்கள்,
விழி திறப்பாயோ ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக